1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (18:06 IST)

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர்
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்தது. இந்த வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு என்பதும் இதனால் ஒரு சில பிரச்சினைகளை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைவடைய தொடங்கியவுடன் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா உச்சத்தில் இருப்பதை அடுத்து மீண்டும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் பணியை தொடங்கியுள்ளது
 
முதல்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இன்று ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மற்ற பகுதிகளிலும் நாளை முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்