கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் முதல்வர்!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:28 IST)

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த ஆண்டை காட்டிலும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை விதித்து வந்தாலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமான
முதல்வர் எடியூரப்பா மீண்டும் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.


இதில் மேலும் படிக்கவும் :