வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 டிசம்பர் 2025 (15:39 IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்
தேர்தல் நெருங்கும் மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
 
கிருஷ்ணாநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அவர்கள் "சமையலின்போது பயன்படுத்தும் கருவிகளுடன் தயாராக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். "உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால் அதை சும்மா விடாதீர்கள். பெண்கள் முன்னணியில் போராட வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார். பா.ஜ.க.வின் பலம் பெரியதா அல்லது பெண்களின் பலம் பெரியதா என்று பார்ப்பதற்கு தான் விரும்புவதாகவும் கூறினார்.
 
கோல்கத்தாவில் நடந்த பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியை குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. மதவாதத்தை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். "தர்மம் என்பது தூய்மை, மனிதநேயம், அமைதி ஆகியவற்றை குறிக்கிறது; அது வன்முறை மற்றும் பிரிவினையை குறிக்கவில்லை," என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.
 
Edited by Siva