தொடர்புடைய செய்திகள்
- எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி.. இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது..!
- இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!
- மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!
- பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?
- என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!
ஏமாற்றமடைந்தேன், அதனால் விலகுகிறேன்.. அரசியலே இனி வேண்டாம்: எலன மஸ்க் அறிவிப்பு..!
எலான் மஸ்க், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையில் இருந்து விலகுவதாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் கூறியதாவது, “செயல்திறன் மேம்பாட்டுக்காக உருவான துறையின் முக்கிய நோக்கம் காலத்தோடு வலுவடையுமென்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
இதற்கு முன், டிரம்பின் புதிய வரி மசோதாவுக்கு எதிராக மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார். “இதில் ஏமாற்றப்பட்டேன்” எனக் கூறிய மஸ்க், அதற்குப் பிறகு அரசுப் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
புதிய வரி திட்டத்தில் உள்ள சில அம்சங்கள் அவருக்கு விருப்பமில்லாமல் இருப்பதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இனி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களில் மஸ்க் முழுமையாக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இனிமேல் அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில், டிரம்ப், செயல்திறன் மேம்பாட்டுக்கான DOGE துறைக்கு மஸ்கை நியமித்தார். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு மஸ்க் ஆதரவு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
