செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜூன் 2025 (18:11 IST)

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

Starlink
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் நோக்குடன், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு உரிமம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பி.டி.ஐ. மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் செய்தி பிரிவுகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
 
இந்த உரிமத்தைப் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், ஏர்டெலின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் சேட்டிலைட் பிரிவு மட்டுமே இதற்கான அனுமதியுடன் செயல்பட்டுவந்தன.
 
புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில், விண்ணப்பித்த 15 முதல் 20 நாட்களில் சோதனை அலைக்கற்றை (trial spectrum) ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உரிமத்தை நாடி காத்திருந்த ஸ்டார்லிங்கிற்கு இது ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.
 
இந்த அங்கீகாரத்துடன், இந்தியாவிலேயே விரைவில் அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையை ஸ்டார்லிங்க் ஆரம்பிக்கலாம். நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கையை தொழில்நுட்பத் துறையினர் வரவேற்கின்றனர்.
 
Edited by Mahendran