வியாழன், 16 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (11:47 IST)

அடுத்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் – கங்குலி நம்பிக்கை!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. இதனையடுத்து இப்போது ப்ளே ஆஃப் போட்டிகள் இப்போது தொடங்க உள்ளன. முதல் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்கும் என்றும் அதற்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் எனவும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அதுபோல முழு ஏலம் நடக்குமா என்பது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.