புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (18:47 IST)

மீண்டும் உலகின் நெம்பர் 1 பணக்காரராக முன்னேறிய எலான் மஸ்க்

உலகின் டாப் பணக்கார்களில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க்.

அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டுவிட்டர் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவராக எலான் மஸ்க் இருக்கிறார்.

உலகின்  நம்பர் பணக்காரராக இருந்த எலான் மஸ்க், கடந்தாண்டு, டுவிட்டர் நிறுவனத்தை பல ஆயிரம் கோடிகள் கொடுத்து வாங்கியதை அடுத்து, உலகின் பலரது கவனத்தைப் பெற்றார்.

ஏற்கனவே, அறிவியல், பேட்டரி கார்கள், விண்வெளி ஆகிய துறைகளில் கவனம் செலுத்திய எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது பரவலாகப் பேசப்பட்ட நிலையில், ஊழியர்களை பணி   நீக்கம் செய்தார்.

இதையடுத்து,கடந்த டிசம்பரில், டெஸ்லா நிறுவன பங்குகள் சரிந்தது.

முதலிடத்தை இழந்த அவர், தற்போது, பங்குகளின் உயர்வு காரணமாக 187 பில்லியன் டாலர்களிடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இப்பட்டியலில், 185 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் நாட்டு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.