1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (11:27 IST)

திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் கணக்கு ஹேக்: அதிர்ச்சியில் கட்சி தொண்டர்கள்..!

Trinomol
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் திடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய இரண்டு சமூக வலைதள கணக்குகளும் இயங்கி வருகிறது என்பதும் இதில் லட்சக்கணக்கான ஃபாலோர்கள் உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகார டுவிட்டர் கணக்கு இன்று காலை திடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 
 
6 லட்சத்து 50 பேர் ஃபாலோயர்களாக இருக்கும் இந்த கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டு அதில் யுகா லேபர்ஸ் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து தாங்கள் கட்சியின் டுவிட்டர் கணக்கை மீட்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் டுவிட்டர் நிறுவனத்தை அணுகி உள்ளதாகவும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva