1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Earthquake in japan today

தமிழக முதல்வர் ஜப்பான் சென்றுள்ள நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஜப்பான்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஜப்பான் சென்றுள்ள நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை இதுவரை விடப்படவில்லை என்றும் சேத விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜப்பான் சென்று உள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தமிழக முதல்வர் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அனைவரையும் நிம்மதிக்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மாணவர்கள் முன்னிலையில் குடுமிப்புடி சண்டை போட்ட பெண் ஆசிரியைகள்..!