1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 26 மே 2023 (11:00 IST)

தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள்..!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு இன்று ஜப்பான் சென்றுள்ள நிலையில் அங்கு ரஜினி ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
 சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளார் என்பதும், அவர் இந்த இரு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று காலை ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலினை ஜப்பான் ரஜினி ரசிகர் மன்றத்தினர் வரவேற்றனர் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன
 
Edited by Mahendran