1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump said he is ready to work with opposite

நான் பண்ணது தப்புதான்.. இணைந்து பணியாற்ற தயார்!.. இறங்கி வந்த டிரம்ப்...

donald trump
டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் பல அதிரடியான நடவடிக்கைகள் ஈடுபட்டார். ஈரான் நாட்டின் மீது போர், கடுமையான குடியேற்றக் கொள்கைகள், நாடு கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது அமெரிக்க மக்களுக்கே பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து சமீபத்தில் நடந்த அமெரிக்கா பாராளுமன்ற இடைத்தேதலில் டிரம்ப்பின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு ஈரான் மீது அமெரிக்கா போர் துவங்கியதுதான் காரணம் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஒத்துக்கொண்டார். அதேநேரம், ஜனநாயகக் கட்சி என்னை முடக்க நினைத்தால் அந்த கட்சியை அழித்துவிடுவேன், என்னுடைய நேட்டோ அதிகாரத்தை வைத்து நான் செய்ய நினைக்கும் விஷயங்களை செய்வேன் என்றெல்லாம் மிரட்டினார்.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் இறங்கி வந்துள்ளார். அமெரிக்கா இடைக்கால தேர்தலில் தனது கட்சியின் தோல்விக்கு தனது கடுமையான குடியேற்றக் கொள்கை மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கையில் கடுமை காட்டியிருக்கக் கூடாது என்றும், இனிவரும் காலங்களில் எதிர்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அன்பில் மகேஷின் ஜாமின் மனு தள்ளுபடி.. திமுகவினர் அதிர்ச்சி...