1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump increased the opt charge

வெளிநாட்டு மாணவர்கள் வேலை செய்ய ரூ.68 லட்சம் கட்டணும்!.. அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்...

donald trump
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மற்றும் பணிபுரிவர்களுக்கான H1 B விசா கட்டணத்தை கிட்டத்தட்ட ஒரு கோடி வரை அதிரடியாக உயர்த்தினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உயர்கல்வி முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தற்காலிகமாக பணிபுரிய உதவும் OPT திட்டத்திற்கு விண்ணப்பக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.68 லட்சம் வசூலிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்திருக்கிறது.

இது, இது வெளிநாட்டு மாணவர்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் அமெரிக்கர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.. மற்ற நாட்டினர் வந்து அமெரிக்காவின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என டிரம்ப் கருதுகிறார். எனவே, அதை கட்டுப்படுத்துவதற்காகவே அவர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்லா கிராமங்களுக்கும் அடிப்படை வசதி!.. 25 வருஷத்துக்கு விஜய்தான்!. என்.ஆனந்த் பேச்சு..