1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump comment about nobel price

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

doanld trump
இந்த வருடமும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். நான் நிறைய போர்களை நிறுத்தியிருக்கிறேன்.. ஆனால் எனக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என கடந்த வருடமே அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் நவி பிள்ளைக்கு நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நியுயார்க்கின் சைராகுஸ் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப் ‘ஜனநாயகத்திற்கு எதிரானவர்களால் அமைதிக்கான நோபல் பரிசு நிரந்தரமாக தனது மதிப்பை இழந்துவிட்டது.

இந்தியா - பாகிஸ்தான் உட்பட 8 போர்களை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.. ஒரு நோபல் பரிசுக்கு பதிலாக 8 நோபல் பரிசு எனக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. உலக அமைதிக்காக போராடிய என்னை விட்டுவிட்டு ஐநாவில் பணியாற்றிய யாருக்குமே தெரியாத இஸ்ரேலை வெறுக்கும் நபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது’ என ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..