1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. iran reply to america with balaya image

பாலிவுட் படம் பாக்குறீங்களா!.. பாலையா படம் போட்டு டிரம்ப்பை காலய்த்த ஈரான்..

balakrishna
அணு ஆயுதத்தை வைத்துக்கொள்ளும் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா சொன்னதை ஈரான் கேட்கவில்லை என்பதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் போரை துவங்கியது. அமெரிக்காவோடு சேர்ந்து இஸ்ரேலும் ஈரானை தாக்கியது. அதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்..

ஏழு மாதங்களுக்கு மேல் போர் நடந்து வரும் நிலையில் தற்போது வரை இந்த போர் முடிவுக்கு வரவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை ஈரானும் ஏற்கவில்லை. மாறாக அமெரிக்காவை எதிர்த்து ஈரான் சண்டை செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஐநா சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு ஈரான் கட்டுப்படவில்லையென்றால் அந்த நாட்டை அழிப்போம் என்று கூறியிருந்தார்.. balakrishna இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் ‘டிரம் ஈரானை அழிச்சிடுவோம்னு சொல்றாரு.. ஈரான் ஒன்னும்  பாதுகாப்பு இல்லாத நாடு கிடையாது என்று அவருக்கு தெரியும்.. சமிபகாலமா ஹாலிவுட்டுக்கு பதிலா ஹாலிவுட் படங்களை பார்த்துட்டு இருக்காரு போல’ என நக்கலடித்திருக்கிறது.. அதில், பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் காட்சியை அதில் இணைத்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வீரமணி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு!.. தமிழக அரசு அதிரடி!..