தொடர்புடைய செய்திகள்
- 40 ரன்களுக்குள் காலி செய்ய நினைத்தோம்; இலங்கை வேகப்பந்து வீச்சாளர்
- உலக ஹாக்கி லீக் போட்டிகள்: ஆஸ்திரேலியா சாம்பியன், இந்தியாவுக்கு வெண்கலம்
- 12 தொடர் தோல்விக்கு பின்னர் முதல் வெற்றி பெற்ற இலங்கை
- தனி ஒருவனாக போராடிய தோனி: இந்தியா 112க்கு ஆல்-அவுட்
- முதல் ஒருநாள் போட்டி: 2 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்தியா திணறல்
டோக்லாம் பகுதியில் மீண்டும் போர் பதற்றம்: 1800 சீன வீரர்கள் குவிப்பு!!
கடந்த ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. இந்தியா - சீனா - பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடமே டோக்லாம் பகுதி.
டோக்லாமில் சாலை அமைத்தால், அதன் வழியாக மிக எளிதாக சீன படைகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட முடியும் என்ற அச்சுறுத்தல் இருந்தது. இதனால், சீன வீரர்கள் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
சில மாதங்களுக்கு நீடித்த பேச்சுவார்த்தையால் இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கியது. அதன் பிறகு டோக்லாம் பகுதியில் அமைதி நிலவி வந்தது. இந்நிலையில் சீன மீண்டும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.
டோக்லாமை இணைக்கும் உயர்மட்ட சாலை பணியை சீனா மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த அமைப்பு இந்தியாவை நோக்கி தென்புறமாக இல்லாமல் வடக்கு நோக்கி உள்ளது. ஆனாலும், இதுவும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்தான்.
மேலும், சுமார் 500 மீட்டர் தொலைவில் கூடுதல் வீரர்களை சீனா இறக்கி வருகிறது. 1800 கூடுதல் வீரர்கள் வந்துள்ளனர். இதனால், இந்தியாவும் எல்லை பகுதியில் அதிக வீரர்களை அனுப்ப தயாராகியுள்ளது. இதனால் டோக்லாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
