திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (18:36 IST)

12 தொடர் தோல்விக்கு பின்னர் முதல் வெற்றி பெற்ற இலங்கை

இன்று தர்மசாலாவில் நடைபெற்ற இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 12 ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இலங்கை அணி

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இலங்கை அணி, இந்திய அணியை வெறும் 112 ரன்களுக்கு சுருட்டியது. தோனி மட்டுமே தனி ஒருவனாக போராடி 65 ரன்கள் அடித்தார்

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி 20.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லக்மால் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இவர் 10 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.