கார் டயருக்குள் சிக்கிய நாய்... பல மணி நேர போராட்டம் ... என்ன நடந்தது ?
சிலி நாட்டில் அண்டோபலாஸ்டா நகரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பயன்படுத்திப் போட்ட கார் டயர் ஒன்று இருந்துள்ளது. அங்கு உணவைத் தேடிச் சென்ற நாய், அந்த டயரைக் கண்டதும் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, திடீரென நாயின் தலை, அந்த டயரின் துவாரத்தில் சிக்கியது. அதனால் வலி தாங்காமல் கத்தத் தொடங்கியது. அதைக் கண்ட பொதுமக்கள் இதுகுறித்து சேவைப் பிரிவுக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேவைபிரினர், நாயின் தலை மாட்டியுள்ள கழுத்தில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லை தடவி, அதன் முகத்தை லேசாக அசைத்து பின்னர் மெதுவாக டயரிலிருந்து நாயின் கழுத்தை வெளியே எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.