திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (14:41 IST)

பல வருட ஆத்திரம் : கணவரின் ஆணுறுப்பை வெட்டி நாய்க்கு போட்ட மனைவி !

டெய்லி மெயில் என்ற ஆங்கில நாளிதழில் வெயிட்டுள்ள செய்தியில், உக்ரைன் நாட்டின், ஓபரிவ் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவனை கோடரியால் வெட்டிக் கொன்றதுடன், அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்து, தான் வளர்த்துவரும் நாய்க்கு உணவாக போட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உக்ரைன் நாட்டில் உள்ள ஓபரிவ் என்ற பகுதியில் மரியா(48) என்ற பெண், தனது கணவர் ஒலக்ஸ்சாண்டருடன்  (49)  இணைந்து வசித்து வருகிறார். 
 
இந்நிலையில் கணவர் ஒலக்சாண்டர் , தினமும் அவரை அடித்துத் துன்புறுத்திவந்துள்ளார். நீண்ட காலமாக இந்த கொடுமை நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இதனால் மனவேதனை அடைந்திருந்த மரியா, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் ஒலக்ஸ்சாண்டர், சாப்பிட்டுவிட்டு படுக்கையில் படுத்துத் தூங்கியுள்ளார். பின்னர் தான் தினமும் கணவரல் சித்ரவதை அனுபவித்து வருவதைத் தாங்கமாட்டாமல், வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து கணவரின் தலையில் அடித்துக் கொலை செய்தார். ரத்தம் பீறிட்டு சுவற்றிலும், தரையிலும்  தெரிந்திருந்தது...பின்னர் இத்தனை வருடம் சித்திரவதைக்கு பழிவாங்கும் விதமாக, சமையல் அறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கணவரின் ஆறுப்பை வெட்டி தான் வளர்த்துவரும் நாய்க்கு உணவளித்தார். அதன்பிறகு கணவரின் உடலை சுக்குநூறாகக் கூறு போட நினைத்த அவரால் வெட்ட முடியாததால் அப்படியே விட்டுவிட்டார்.
 
இதனையடுத்து, கையில் கத்தியும் ரத்தக் கரையுமாக நின்றதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் ஒபானாசக், இதுகுறித்து மரியாவிடம் கேட்டுள்ளார். 
 
அதற்கு, கணவர் தன்னைக் கணவர் கொல்ல வந்துள்ளதாகக் கூறியுள்ளார் மரியா...
பிறகு, மரியாவின் வீட்டுக்குச் சென்ற ஒபனாசக், ஒலக்ஸ்சாண்டரைத் தேடியுள்ளார். பின்னர் கீழே தரையில் ரத்தக் கரை வீட்டில் இருந்தததையும்,  கட்டிலில்  அவரது கணவரின் சிதைந்த உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
கணவரின் தலை எங்கே என ஒபானாசக் கேட்டதற்கு, அது சாக்கு மூட்டையில் உள்ளது என  மரியா தெரிவித்துள்ளார்.
 
பின்னர், போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து ஒலக்ஸ்சாண்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
இக்கொலை செய்த மரியாவை கைது செய்த போலீஸார் கூறியதாவது : இதுகுறித்து விசாரணை செய்து வருகிறோம், மரியாவுக்கு 15 வருடம் சிறைத்தண்டனை கிடைக்குமென தெரிவித்தனர்.
 
மரியாவின் மகன் கூறியதாவது : எனக்குத் தெரியும் அவர் எனது அம்மா. ஆனால் இனிஒருபோதும் அவரை நான் பார்க்க மாட்டேன் என உள்ளூர் ஊடகத்திற்குத் தெரிவித்தார்.