ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:54 IST)

சாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: பதறவைக்கும் சம்பவம்

சாலைகளில் ஆங்காங்கே சுமார் 90 நாய்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில், கிர்டா-சவல்டபரா சாலையில் ஆங்காங்கே நாய்கள் இறந்துகிடந்துள்ளன. சுமார் 100 நாய்கள் சாலைகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவைகளில் 90 நாய்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட நாய்கள் அனைத்தும் சங்கிலியாலும், கயிறுகளால் அதன் கால்களை இறுக்கியும் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.