1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP Government Issues New Orders Banning Animal Sacrifices During Bakrid Festival

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

பக்ரீத்
பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி மாநில பாஜக அரசு ஒரு சில புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 இதன்படி, பொது இடத்தில் மாடுகள் மற்றும் ஒட்டகங்களை பலி கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இது சட்டப்படி குற்றமாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பலி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இடங்களை தவிர இதர இடங்களில் பலி கொடுப்பது சட்டவிரோதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சட்டவிரோதமான பலி கொடுப்பதை எதிர்த்து உடனடி நடவடிக்கை எடுக்க போலீசருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதுமட்டுமின்றி, மாடுகள், ஒட்டகங்களை பலி கொடுப்பதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால், அதுவும் குற்றமாக கருதப்படும் என்று டெல்லி மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!