1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ramadoss Assures Smooth Resolution to PMK's Internal Issues

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

பாமக
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “நான் இங்கு வந்தது மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே. பல் மருத்துவரை சந்திக்க வந்துள்ளேன். அரசியல் தொடர்பான யாரையும் சந்திப்பதற்கான திட்டமோ, நோக்கமோ இல்லை என்று தெரிவித்தார்.
 
மேலும் அன்புமணியுடன் எனக்குள் எந்த தகராரும் இல்லை. அவரை சந்திக்க என்னிடம் எந்த திட்டமும் இல்லை. எதிர்பார்க்கப்படாத பிரச்னைகள் வந்தாலும், அதற்கு தீர்வுகள் இருக்கின்றன. தீர்வில்லாத பிரச்னை என்றே இல்லை. பாமகவில் உள்ள குழப்பங்களும் சீராகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடந்ததை விடுவோம், வரப்போகும் காலத்தையே பேசலாம்,” என்று கூறினார்.
 
அமித்ஷா தமிழ்நாடு வருகையால் பாமக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், “கூட்டணி பற்றி பேச சரியான நேரம் இது அல்ல. அதைப்பற்றி சிந்திக்கவும் இல்லை.  
 
முகுந்தன் கட்சியில் ஈடுபடமாட்டாரா என்ற கேள்விக்கு, “கட்சியில் பல பொறுப்புகள் உள்ளன. ஆனால் தற்போதைக்கு அவர் அரசியலில் அக்கறை காட்டவில்லை. தனது தொழிலில் கவனம் செலுத்த விரும்புகிறார்,” என தெரிவித்தார். மேலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலில் பாமக பாதிக்கப்படாது எனவும் உறுதி தெரிவித்தார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!