புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:57 IST)

பொம்மை நாய்க்குட்டியை தூக்கிக் கொஞ்சிய நிஜ நாய் : வைரலாகும் வீடியோ

இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இந்த  நாய்கள் வீட்டுக்காரர்களில் ஒரு உறுப்பினராகவே மாறியது போன்று பாசம் செலுத்தும். இந்த நிலையில் ஒருநாய் ஒரு பொம்மை நாயைக் கொஞ்சும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நார்த்வைலில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் நாயை வளர்த்துவருகின்றனர்.
 
இந்த நாய், தன்னைப் போன்று உள்ள ஒரு பொம்மை நாயைக் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. வீடியோவில் மனிதர்கள் குழந்தைகளைக் தூக்கிவைத்துக் கொஞ்சுவது போன்று இந்த நிஜ நாய், பொம்மை நாயை குட்டியைத் தூக்கி வைத்து கொஞ்சுவதை பலரும் ரசித்து,. இந்த வீடியோவை பரவலாக்கி வருகின்றனர்.