கொரோனோ வைரஸ் பாதித்த நோயாளிகளுடன் மருத்துவர்கள் ’டான்ஸ் ‘! வைரல் வீடியோ

china
sinoj kiyan| Last Modified புதன், 12 பிப்ரவரி 2020 (21:12 IST)
கொரோனோ வைரஸ் பாதித்த நோயாளிகளுடன் மருத்துவர்கள் ’டான்ஸ் ‘! வைரல் வீடியோ

சீனா தேசத்தில் இந்தாண்டு புதுவருடம் அனைவராலும் மறக்க முடியாததாக துன்பத்துடன் கூடியதாக அமைந்துவிட்டது. அங்குள்ள வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியானதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்த கொரோனோ வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவில் இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர சிகிச்சைகள் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த நோயின்
தொடக்கமாக கருதப்படும் வூகான் மாகாணத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுடன், மருத்துவர்கள் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.


உயிர் பறிபோகும் என்ற நோயாளிகளுக்கும், இந்த நடனம் நம்பிக்கை ஊட்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :