கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு? பதிலடி கொடுத்த மத்திய அரசு..!
கனடாவின் தேர்தலில் இந்திய தலையீடு உள்ளது என்று அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
கனடா பிரதமர் பதவியில் இருந்து சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய வரும் மார்ச் மாதம் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று கனடா தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியது. இது குறித்த செய்திகளும் அந்நாட்டின் முன்னணி ஊடகங்களில் தெரிவித்திருந்தன. கனடா தேர்தலில் இந்தியா தலையீடு உள்ளது. இந்தியா உலக அரங்கில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது. கனடாவும் இந்தியாவும் பல ஆண்டுகளாக ஒன்றாக வேலை செய்துள்ளனர்.
தற்போது, இந்தியாவின் வெளிநாட்டு தலையீடு நடவடிக்கைகள் குறித்து வருந்துகிறோம் என்று கனடா குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், "தலையீடு என்று கூறி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். உண்மையில், இந்தியாவின் உள் விவகாரங்களில் தான் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. அவர்கள் தான் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran