1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Rises Again Today: Increased by ₹680 in Chennai in a Single Day

இன்று ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

Gold
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாயும் ஒரு சவரனுக்கு 680 உயர்ந்துள்ளதாக வெளி வந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில்  நேற்று ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் இன்று திடீரென ஒரு கிராமுக்குக் 85 ரூபாய் உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளை விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 85 ரூபாய் உயர்ந்து    7,595 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 680 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   60,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,285 எனவும் ஒரு சவரன் ரூபாய் 66,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 3 அரசுப்பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது!