வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜனவரி 2025 (10:18 IST)

சுனிதா வில்லியம்ஸை பத்திரமா பூமிக்கு அழைச்சிட்டு வாங்க! - எலான் மஸ்க்கிடம் பொறுப்பை கொடுத்த ட்ரம்ப்!

Sunita Williams.

விண்வெளி ஆய்வு மையத்தில் மாதக் கணக்கில் சிக்கித் தவித்து வரும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எலான் மஸ்க்கிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விண்வெளி வீராங்கனையாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். நாசாவிற்காக பலமுறை விண்வெளி ஆய்வு பணிகளை செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார். அவருடன் பட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரரும் உடன் சென்றார்.

 

10 நாட்களில் பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள் 6 மாத காலமாகியும் இன்று வரை திரும்ப அழைக்கப்படாமல் உள்ளனர். பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக அவர்கள் திரும்ப அழைக்கப்படுவது கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இடையே சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்திலிருந்தே கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோ வைரலானது.

Elon musk Trump

இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக அழைத்து வரும் பொறுப்பை எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளார். 

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் “விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் வீட்டிற்கு அழைத்து வருமாறு டொனால்டு ட்ரம்ப் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். ஜோ பைடன் அவர்களை நீண்ட காலமாக விண்வெளியில் தவிக்க விட்டது கொடூரமானது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K