திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:07 IST)

கணவர் மீது கொலை வெறி தாக்குதல் : துப்பாக்கி காட்டி விரட்டிய மனைவி (வீடியோ)

தன் கணவன் மீது திடீர் தாக்குதல் தொடுத்த மர்ம கும்பலை துப்பாக்கி காட்டி விரட்டி பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவாட்டத்தில் உள்ள ககோரி எனும் பகுதியில் காலை நேரம் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரெனெ அவரை தாக்கியது. முதலில் கையில் அடித்த அவர்கள், பின்னால் உருட்டு கட்டையால் தாக்க தொடங்கினர்.
 
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அவர்களின் தாக்குதலால் நிலை குலைந்தார். அப்போது, அவரின் மனைவி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை காட்டி மிரட்ட அவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.