திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (08:20 IST)

முதல்வர் மீது முட்டை வீச்சு; பெண் மீது வழக்கு பதிவு

அரசியல்வாதிகள் மீதான மக்களின் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒடிசா  நாட்டின் முதலமைச்சர் மீது பெண் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி காமிலா.  இவர் அந்நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த பொதுக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்த போது ராஜேஸ்வரி காமிலா, முதல்வர் மீது முட்டையை வீசினார். அதிர்ஷ்டவசமாக முதல்வர் மீது அவர் வீசிய முட்டை படவில்லை. எதிர்பாராத இச்சம்பவத்தினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாச வேலையில் ஈடுபட்ட அந்த பெண் மீது போலீஸார் வழக்கு பதிவி செய்து சிறையில் அடைத்தனர்.
 
சிறையில் இருந்த பெண் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையறிந்த முதல்வர் ராஜேஸ்வரி காமிலா மீதான அனைத்து  வழக்குகளையும் திரும்ப பெறுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதேபோல் தமிழகத்தில் அதிமுக அமைச்சரை தாக்கிய நபர், போலீஸார் விசாரணையில் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.