வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2023 (10:43 IST)

கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவர் படுகொலை: கழுத்தை நெறித்ததாக தகவல்..!

scientist
கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவர் படுகொலை: கழுத்தை நெறித்ததாக தகவல்..!
கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க உதவிய 43 வயது விஞ்ஞானி ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும், இதில் லட்சக்கணக்கானோர் உயிர் இழந்தனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் உள்பட பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் கொரோனா தொற்றுக்கு ஸ்பாட்னிக் வி என்ற தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவை சேர்ந்த 18 விஞ்ஞானிகளில் ஒருவர் ஆண்ட்ரி போடிகோவ். 43 வயதான இவர் 29 வயது இளைஞர் ஒருவரால் கழுத்து நியமிக்கப்பட்டு கொலை செய்ததாக தெரியவந்தது. 
 
இந்த கொலை எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான ஆண்ட்ரி போடிகோவ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva