திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2023 (08:23 IST)

பாடிக் கொண்டிருக்கும் போது தாக்கிய ட்ரோன் கேமரா… பாடகர் பென்னி தயாளுக்கு நடந்த சோகம்!

பிரபல பாடகர் பென்னி தயாள், ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். பல்வேறு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிய அவருக்கு விபரீதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இசை நிகழ்ச்சியில் அவர் ஊர்வசி பாடலைப் பாடிக்கொண்டு இருந்த போது கான்செர்ட்டை படம்பிடிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கேமரா அவருக்கு அருகில் சென்று அவர் தலையில் மோதியது. அதனால் வலியில் துடித்த அவர் கைகளால் ட்ரோன் கேமராவை அகற்ற முயன்ற போது அவரது கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இது சம்மந்தமான வீடியோ துணுக்குகள் இணையத்தில் பரவி வருகின்றன.

பின்னர் இதுபற்றி வீடியோ வெளியிட்ட பென்னி தயாள் “தலையின் பின்பகுதியிலும், இரண்டு விரல்களிலும் காயங்கள் ஏற்பட்டன. நான் விரைவில் இதிலிருந்து குணமடைவேன்” எனக் கூறியுள்ளார்.