திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:58 IST)

கொரோனா வைரஸால் ஹாங்காங்கில் ஒருவர் பலி..

கொரோனா வைரஸால் உயிரிழப்பு

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸால் சீனாவில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் ஹாங்காங்கில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், 425க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா, தைவான், ஹாங்காங், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளில் வைரஸ் பரவி வருகிறது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனிடையே சீனாவின் உகான் நகரிலிருந்து திரும்பிய ஹாங்காங்கை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 39 வயதான இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸால் பலியான நிலையில் சீனாவிற்கு வெளியே உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.