திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (10:53 IST)

கொரோனா எதிரொலி: அதிரடி முடிவெடுத்த கேரள அரசு!!

Corona Virus

கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மூவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் கேரளாவில் அவசரநிலையை அறிவிப்பதாக தெரிவித்தார். இது ஏற்படுத்திய பெரும் பரபரப்பு அடங்குவதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அவசரநிலையாக பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கது.