1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona show their massive effect next in South Korea

கொரியா சென்ற கொரோனா! – அதிர்ச்சியில் அண்டை நாடுகள்!

World
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தென்கொரியாவில் கொரோனா பலி அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. வேகமாக பரவும் இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 2 ஆயிரத்து 442 பேர் பலியாகியுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை மெல்ல குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பலி அதிகரிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவில் கொரோனா வைரஸால் 7 பேர் பலியாகி உள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென்கொரிய அரசு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து கொரியாவிலும் கொரோனா பெரும் உயிர்பலியை ஏற்படுத்தி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!