செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (10:49 IST)

நான்தான் மகேந்திர பாகுபலி ட்ரம்ப்!: அட்டகாசம் செய்யும் அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பாகுபலியாக சித்தரித்து வெளியான வீடியோவை ட்ரம்ப்பே பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்திய பயணம் இந்தியர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ அவருக்கு ரொம்ப கொண்டாட்டமாக இருக்கிறது. இந்திய பயணத்தை நிர்ணயித்த நாள் தொட்டு எங்கு பேசினாலும் இந்தியாவை பற்றி பேசாமல் விடுவதில்லை ட்ரம்ப். இந்தியாவில் என்னை வரவேற்க 70 லட்சம் பேர் வருவார்களென மோடி சொன்னார், இந்தியாவுடன் பெரிய ஒப்பந்தம் போட போகிறேன் என நாளைக்கு ஐந்து முறையாவது இந்தியா குறித்து பேசி விடுகிறாராம்.

இந்நிலையில் இந்தியாவிலும் ட்ரம்ப் வருகையை ஒட்டி பல்வேறு வீடியோக்கள், மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாகுபலி பட காட்சிகளில் பிரபாஸ் முகத்திற்கு பதிலாக ட்ரம்ப் முகம் இருக்கும்படி எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ட்ரம்ப் ”எனது இந்திய நண்பர்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.