செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (11:10 IST)

எவரெஸ்ட் உச்சியையும் தொட்டது கொரோனா! – மலை ஏறுபவர்கள் பாதிப்பு!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்புகள் எவரெஸ்ட் மலையில் ஏறுபவர்களுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் பரவியுள்ள நிலையில் பல கோடி மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது எவரெஸ்ட் மலையேறும் குழுவினருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேபாள எல்லைக்குள் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏற பல நாட்டிலிருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். இந்நிலையில் கடந்த மாதமே எவரெஸ்ட் பயண குழுவில் சிலருக்கு கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. போலந்து நாட்டு பயணி ஒருவருக்கும், உள்ளூர் வழிகாட்டி ஒருவருக்கும் கொரோனா உறுதியானதால் அவர்கள் எவரெஸ்ட் பிரதான கேம்பிலிருந்து காத்மாண்டு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல்களை நேபாள அரசு வெளியிடாமல் மறைக்க முயல்வதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.