1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. China president warned who plan to divide china

சீனாவை பிரிக்க நினைத்தால் அவ்வளவுதான்! யாரை எச்சரிக்கிறார் சின்பிங்?

World News
உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்து பிரதமரை சந்தித்த சீன அதிபர் தாயகம் திரும்பியதும் “சீனாவை துண்டாட நினைப்பவர்கள் அழிக்கப்படுவார்கள்” என பேசியுள்ளார்.

முறைசாரா இரண்டாவது உச்சி மாநாட்டிற்காக தமிழகம் வந்த சீன அதிபர் மாமல்லபுரத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்தித்தார். இந்நிகழ்வுக்கு பிறகு விடைப்பெற்று நேபாளம் சென்ற அவர் அங்கு தனது அரசாங்கரீதியான பணிகளை முடித்து கொண்டு சீனா திரும்பினார்.

சீனா திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சீனாவின் எந்த பகுதியையும் யாராலும் பிரிக்க முடியாது. அப்படி சீனாவை துண்டாட நினைத்தால் அவர்கள் சுக்குநூறாக்கப்படுவார்கள், அவர்களது எலும்புகள் மண்ணோடு மண்ணாக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் அவர் யாரை குறிப்பிட்டு அப்படி கூறியிருக்கிறார் என்பது தெரியாததால் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் குறித்து இந்தியா சீன அதிபரிடம் எதுவும் பேசவில்லை என்பதால் நிச்சயமாக இந்தியாவை குறிப்பிட்டு கூறியிருக்க முடியாது. ஹாங்காங் பகுதியில் நடந்து வரும் மக்கள் புரட்சியை கருத்தில் கொண்டே சீன அதிபர் இதை சொல்லியிருக்க வேண்டும் என பேசிக்கொள்ளப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
பல கேச பாத்தவன் நான், இது எனக்கு ஒன்னுமே இல்ல... அசால்ட் சீமான்!!