அன்று அமேசான்; இன்று கலிஃபோர்னியா! – பற்றி எரியும் காடுகள்!

forest fire
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (13:08 IST)
அமெரிக்காவின் தெற்கு கலிப்போர்னியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் காட்டு தீயால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது.

கலிபோர்னியாவின் காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. நாளாக நாளாக பெரிய அளவில் வளர்ந்து வந்த காட்டுத்தீ இதுவரை சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பை எரித்து நாசம் செய்துள்ளது.

இதனால் சுமார் 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ளன. தென் அமேரிக்காவில் அமேசான் பற்றியெறிந்த சம்பவத்துக்கு பிறகு நடக்கும் மற்றுமொரு பெரும் காட்டுத்தீ இது.

பசுமையான காடுகள் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருவதால் இயற்கை பருவ நிலைகளில் ஏற்படப்போகும் விளைவுகளை எண்ணி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மக்கள் அச்சமடைய தொடங்கியிருக்கிறார்கள். இதுபோல காட்டிற்குள் ஏற்படும் தீயை உடனடியாக அணைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :