செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (19:59 IST)

உடல் முழுவதும் பரவிய நாடாப்புழுக்கள்: கறியை சமைக்காமல் சாப்பிட்டதால் நடந்த கொடூரம்!

சீனாவில் இறைச்சியை சமைக்காமல் உண்டவர் உடலில் நாடாப்புழுக்கள் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹங்க்சோ பகுதியை சேர்ந்தவர் ஸூ சோங். இவர் கடந்த ஒரு மாதமாக தீராத தலைவலி, வாந்தியால் அவஸ்தை அனுபவித்து வந்துள்ளார். மிகவும் மோசமான சூழலில் மருத்துவமனை வந்தவரை டாக்டர்கள் சோதித்துள்ளனர்.

உடலை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி. அவரது உடலில் மூளை, நுரையீரல் மற்றும் குடல்பகுதிகளிலும் எக்கச்சக்கமான நாடாப்புழுக்கள் இருந்துள்ளன. இதுகுறித்து ஸூ ஹோங்கிடம் விசாரித்தபோது சில மாதங்களுக்கு முன்பு அதீத பசியால் சமைக்காத இறைச்சியை உண்டதாக தெரிவித்துள்ளார். சமைக்காத இறைச்சிகளில் இருந்த நாடாப்புழு முட்டைகள் உடலுக்குள் வளர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சமைக்காத இறைச்சியை சாப்பிட்டதால் உடல் முழுவதும் நாடாப்புழு பரவிய இந்த சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.