1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (19:20 IST)

2019 -ஆம் ஆண்டின் சிறந்த பிஸினஸ்மேன் இந்தியர்...யார் தெரியுமா ?

அமெரிக்க நாட்டில் இருந்து வெளியாகும் ’ஃபார்சூன்’ இதழ்,   இந்த 2019 ஆம் ஆண்டில் சிறந்த பிசினஸ் மேன் என்ற விருதுக்கு இந்தியரான சத்ய நாதள்ளாவை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியான சத்ய  நாதள்ளா, இந்தியவர் ஆவார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில், தலைமைச் செயல் அதிகாரியாக  இருந்து வருகிறார்.
 
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல Fortune இதழ், வருடம் தோறும் உலகில் மிகச் சிறந்த பிசினஸ் மேன்களை , தேர்வு செய்து வருகிறது.
 
இந்நிலையில், இவ்வருடத்துக்கான சிறந்த பிஸினஸ் மேனாக முதலிடத்தில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியான சத்ய  நாதள்ளா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இதற்கடுத்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  Fortescue Metals Group ஐ சேர்ந்த எலிசபெத் கெயின்ஸ் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
 
மேலும், ஐரோப்பாவில் சுமார் 2500 உணவகங்களுக்கு மேல் சிறப்பாக நடத்திம் வரும் சிப்பொடில் மெக்சிகன் கிரில் மூன்றவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
உலக அளவில் நமது இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிறந்த பிசினஸ் மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு அனைவரும் சத்ய  நாதள்ளாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நிறுவனர் உலகில் மிகபெரிய கோடீஸ்வரர் பில்கேட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.