1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (16:39 IST)

’107 வயது தாயிடம்’ சாக்லெட் பெற்ற ’84 வயது மகள்’ : வைரல் வீடியோ

வாழ்வில் முதுமையை மறைக்க முடியாது. அது நேருவதையும் தவிர்க்க முடியாது. இந்நிலையில், சீன நாட்டில் 84 நான்கு வயதான மூதாட்டி ஒருவர், தனது 107 வயது அம்மாவிடம் இருந்து கேண்டி என்ற சாக்லேட் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
குழந்தைகள் முதல் அனைவருக்குமே மிகவும் பிடித்தது சாக்லெட். சிரிக்காதவர்களிடம் சாக்லெட் கொடுத்தால் அனைவரும் புன்னகை செய்வர். இந்த சாக்லெட் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக உள்ளது.
 
அந்த வகையில், சீன தேசத்தில், அதிக வயதான பெண்மணியாகப் கருதப்படும் ஒரு மூதாட்டி(107), தனது மகளுக்கு (84) 'கேண்டி' எனப்படும் சால்லெட் கொடுக்கிறார். அதை சிரித்துக்கொண்டு வாங்கி தனது வாயில் போட்டு சுவைத்தார் அந்த மகள் மூதாட்டி. இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.