முட்டை மார்க் எடுத்த மாணவியை பாராட்டிய சுந்தர் பிச்சை!

sundar pichai
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 22 நவம்பர் 2019 (18:39 IST)
தான் இயற்பியலில் ஸீரோ மதிப்பெண் பெற்றதாக ட்விட்டரில் தெரிவித்த மாணவியை கூகிள் இயக்குனர் சுந்தர் பிச்சை வாழ்த்தியிருக்கிறார்.

அமெரிக்காவில் கலிப்ஃபொர்னியா பல்கலைகழகத்தில் வானியற்பியலில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி சரபினா நான்ஸ். இவர் விண்வெளி காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூப்பர்நோவா கோள்வெடிப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

அவர் சமீபத்தில் தனது ட்விட்டரில் இட்ட பதிவில் ”நான் நான்கு வருடங்களுக்கு முன்பு குவாண்டம் இயற்பியல் பாடம் படித்து வந்தேன். ஆனால் அதில் நான் பூஜ்ஜியம் மதிப்பெண்தான் எடுத்தேன். பிறகு குவாண்டம் பாடத்திலிருந்து வெளியேறி விண்வெளி இயற்பியலை தேர்ந்தெடுத்தேன். ஆகவே உங்களால் சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை. எது என்பதை தேர்வு செய்ய வேண்டும்” என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பதிலளித்துள்ள கூகுள் நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சை ”சரியாக சொன்னீங்க” என்று கூறியுள்ளார். ஒருவேளை சுந்தர் பிச்சை வாழ்விலும் இதுபோல சம்பவங்கள் நடந்திருக்கலாம். தற்போது இந்த ட்வீட்டை தொடர்ந்து அந்த பெண்ணை பலர் பின் தொடர தொடங்கியுள்ளார்கள்.இதில் மேலும் படிக்கவும் :