தொடர்புடைய செய்திகள்
- சீனர்களுக்கு லஞ்சம் வாங்கி விசா: ப சிதம்பரத்திற்கு தெரியாமல் நடந்ததா?
- சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு!
- சீனாவும் தென்கொரியாவும் தடுப்பூசி கொடுக்க தயார் - மவுனம் சாதிக்கும் வடகொரியா!
- டேக் ஆஃப் ஆன விமானம் திடீர் விபத்து! – சீனாவில் அதிர்ச்சி சம்பவம்!
- திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்தது - பயணிகளின் நிலை என்ன?
திட்டமிட்டே விபத்துக்குள்ளான விமானம்..! கருப்புப் பெட்டியில் சிக்கிய பகீர் தகவல்!
சீனாவில் சமீபத்தில் நடந்த விமான விபத்து குறித்து கருப்புப் பெட்டியை ஆராய்ந்தபோது விமான விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிய வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி குவாங்சி மாகாணத்தில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் சென்ற 132 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டிகளை கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க புலனாய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விமானத்தில் விபத்திற்கு முன் எந்த பழுதும் ஏற்படவில்லை என்றும், விமானத்தை இயக்கியவர்களில் யாரேனும் ஒருவர் திட்டமிட்டே விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
