1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 மே 2018 (18:31 IST)

30,000 அடி உயரத்தில் விமான சன்னல் திறந்ததால் பரபரப்பு...

சீனாவில் விமானம் ஒன்று 32,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த போது அதன் சன்னல் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விரிவான செய்திகள்...
 
சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு 128 பயணிகளுடன் புறப்பட்டது. 
 
விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானிகள் அறையான காக்பிட்டில் துணை விமானி இருக்கையின் அருகே சன்னல் பாதி அளவு திறந்தது. 
 
அப்போது விமானம் மணிக்கு 800 முதல் 900 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்து காற்றை தடுத்து நிறுத்தும் கருவி வெடித்தது. அதோடு துணை விமானியும் கார்றின் வேகத்தால் தூக்கி எரியப்பட்டார். 
 
இதனால் உஷாரான விமானி, விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். பயணிகளுக்கு இந்த வித ஆபத்தும் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.