வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:36 IST)

கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்களுக்கு தடையா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு..!

கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் இதை பார்க்கும் குழந்தைகள் மனம் கெட்டுப்போக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ’கூகுள் தளத்தில் சில நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். இந்த விளம்பரங்கள் காரணமாக இணையதளத்தை பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மன பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பாச விளம்பரத்தில் உள்ள ஆபாச புகைப்படங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கூகுள் நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

Edited by Siva