வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 29 மே 2017 (11:59 IST)

ரமலான் நோன்பு துவக்கம்: அபுதாபி சாலைவிதிகளில் அதிரடி மாற்றங்கள்!!

ரமலான் நோன்பு மாதத்தில் விபத்துகளை தவிர்க்க அதிரடியான சாலை கட்டுபாட்டு விதிகளை அபுதாபி நகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது.


 
 
அபுதாபி நகரத்தின் ரோந்து மற்றும் சாலை போக்குவரத்து துறை அதிகாரி இதற்கான உத்தரவை அபுதாபி நகரம் முழுவதும் பிறப்பித்துள்ளார்.
 
# ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் மற்றும் டிரக்குகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை அபுதாபி நகர சாலைகளில் செல்லக்கூடாது.
 
# இதே நேரங்களில் 50 பயணிகளுக்கு மேல் பொது போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்கக்கூடாது. 
 
# இதே விதிமுறைகளை பின்பற்றி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை அபுதாபி நகரத்தில் வாகனங்கள் செயல்படவேண்டும். 
 
இதுகுறித்து அபுதாபி நகரத்தில் உள்ள அனைத்து கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கையும் மற்றும் நேரடியான அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளது.