1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. UGC NET 2026 Re-Exam Dates Announced for English, Commerce and Sociology Papers

UGC NET மறுதேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை.. 3 பாடங்களுக்கு எப்போது தேர்வு...

neet exam
UGC NET 2026 தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட தகவலின்படி, இந்த மூன்று பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருந்ததாக தேர்வர்கள் தரப்பில் புகார்கள் வந்ததை தொடர்ந்து மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆய்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், வினாத்தாள்களில் உண்மைத்தகவல், எழுத்துப்பிழை, மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கண பிழைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில அறிஞர்களின் பெயர்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததுடன், புத்தகங்களின் தலைப்புகள் குழப்பமாக இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், முன்பு கேட்கப்பட்ட கேள்விகள் மீண்டும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆங்கில பாடத்திற்கான மறுதேர்வு செப்டம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், வணிகவியல் தேர்வு அதே நாளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். சமூகவியல் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது.
 
தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக மையத்திற்கு செல்ல வேண்டும். அனுமதிச்சீட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை எடுத்து செல்ல வேண்டும். கணினியில் காட்டப்படும் வினாத்தாள் தாங்கள் தேர்வு செய்த பாடத்திற்கானதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினர் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. என்ன காரணம்?