திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (16:04 IST)

பிரித்தெடுக்கும்போது திடீரென பற்றிய தீ; கொழுந்து விட்டு எரிந்த விமானம்!

ஸ்பெயினில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஸ் ஏர்வேஸுக்கு சொந்தமான 747 என்ற போயிங் மாடல் விமானம் சமீபத்தில் பிரித்தெடுக்கும் பணிகளுக்காக தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்தில் வைத்து விமானத்தை பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென விமானங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.