செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (13:09 IST)

தூக்குல போட்டா சரிப்படாது.. ஆண்மையை நீக்கிடுங்க! – பாலியல் குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் சட்டம்!

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகளவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இந்த பாலியல் வன்முறைகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என உலகளவில் பல சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் உலக நாடுகள் பல பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை அமல்படுத்தவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும் என பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் சிலர் குற்றவாளிகளை தூக்கிலிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரண தண்டனை வழங்கமால் வேதியியல் ரசாயனங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது குறித்து சிபாரிசு செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.