1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (10:56 IST)

பூனையின் அளவற்ற பாசம்: அணில் குட்டிகளுக்கு பாலூட்டும் அரிதான காட்சி!!!

உகாண்டாவில் அணில் குட்டிகளுக்கு பூனை ஒன்று பாலூட்டும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பெற்ற பிள்ளைகளையே அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடும் பெற்றோர்களுக்கும், பெற்றோர்களை முதியார் இல்லத்தில் சேர்த்துவிடும் பிள்ளைகளுக்கும் மத்தியில் பூனையின் பாசம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
உகாண்டாவில் கிரிமா என்ற இடத்தில் ஏராளமான அணில்கள் அனாதையாக சுற்றித்திரிகிறது. குறிப்பாக அணில்குட்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த அணில்குட்டிகளுக்கு பூனை ஒன்று பாசமாக பாலூட்டுகிறது. அந்த பூனை அணில் குட்டிகளுடன் கொஞ்சி விளையாடியும் சேட்டை செய்தும் வரும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.