வேர்வ வர வேட்பாளர் துடைக்க; உதய் அண்ணா மீது பொங்கிய பாசம்; திமுக பிரச்சாரத்தில் கலகலப்பு!!!

stalin
Last Updated: ஞாயிறு, 24 மார்ச் 2019 (16:00 IST)
உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு வருகிறார். 
 
அதோடு, திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு நேரடி பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளார். இதனையடுத்து உதயநிதியின் பிரச்சார பயணம் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
 
அந்த வகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கெளதம சிகாமணியை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
 
அப்போது வெயில் அதிகமாக இருந்ததால், உதயநிதிக்கு வியர்வை கொட்டியது. அருகிலிருந்த வேட்பாளர் கவுதம் சிகாமணி உதயநிதியின் வியர்வையை துண்டால் துடைத்துவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த வேட்பாளரை பாராட்டியும் ஒருசிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :